5/17/2009

ஜனாதிபதி நாடுதிரும்பினார்;பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்


ஜோர்தானிற்கு ஜீ-11நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது., ஜனாதிபதி விமானத்திலிருந்து இறங்கி நிலத்தில் தலை வைத்து தாய்நாட்டை வணங்கினார். இதனையடுத்து ஜானாதிபதிக்கு ஆசி வேண்டி இடம்பெற்ற இந்து, பௌத்த,கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.நாடு விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கொழும்பின் பல பகுதிகளிலும் தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.அதேவேளை ஜீ-11 உச்சிமாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றிய போது ,"கொடூரமான புலிப் பயங்கரவாதிகளிடமி ருந்து விடுதலைபெற்ற இலங்கைத் திருநாட்டு க்கு தான் திரும்பிச் செல்வதாக"தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment