5/25/2009

நேபாள புதிய பிரதமராக மாதவ் குமார் தெரிவு





நேபாள புதிய பிரதமராக மாதவ் குமார் தெரிவு
நேபாள நாட்டுப் புதிய பிரதமராக மாதவகுமார் நேபாள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார்.
நேபாள நாட்டில் மன்னர் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஒழிக்கப் பட்டு மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக பிர சந்தா இருந்து வந்தார். இரா ணுவ தலைமை தளபதி ஜெனரல் ருக்மாங்கட் கொத்வாலை மாற்ற பிரசந்தா நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு ஜனாதிபதி ராம்பரன் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கடந்த 4ம் திகதி பிரசந்தா இராஜினாமாச் செய்துவிட்டார்.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ குமார் நேபாளை வேட்பாளராக நிறுத்த நேபாள கம்யூனிஸ்ட் தலைமையிலான 22 கட்சி கூட்டணி முடிவு செய் தது. பிரதமர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடிந்தது.
இதைத் தொடர்ந்ந்து நேபாள கம்யூ னிஸ்ட் கூட்டணி சார்பில் பிர தமர் வேட்பாளராக மாதவ குமார் நோபாளின் பெயரை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா முன் மொழிந்தார். அதை கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜலநாத கனால் வழி மெழிந்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் நேபாள நாட்டின் புதிய பிரத மராக மாதவ குமார் நேபாள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் சுபாஷ் நெம்வாங் அறிவித்தார்.



0 commentaires :

Post a Comment