ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயும் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.
ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பையடுத்து இம்முயற்சிகள் தோல்விகண்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் குறித்த விடயம் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாக்களிப்பு அவசியமாகும். மேற்குலக ராஜதந்திரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் அவசியமில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இவ்விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்த போதும் ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இலங்கையில் இடம்பெறும் நடவடிக்கைகள் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் எத்தகைய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதால் பாதுகா ப்புச் சபையில் இந்த விடயம் ஆராயப்படத் தேவையில்லை யென்று மேற்படி மூன்று நாடு களும் தெரிவித்துள்ளன
0 commentaires :
Post a Comment