5/06/2009

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை மீட்பதேஅடுத்தகட்ட மனிதாபிமான நடவடிக்கை


புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியினால் இன்று வரை சுமார் 1,30,000 தமிழ் மக்களை மீட்டெடுத்திருந்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க முடியாதுள்ளது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் இறுதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அனைத்து மக்களையும் மீட்டெடுத்து புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதுடன், வெகு விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
தயா மாஸ்டர் போன்று, ஜோர்ஜ் மாஸ்டர் போன்று புலிகளின் மிலேச்சத்தனத்தை வெளி உலகுக்கு உணர்த்தும் குழுவினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தபடி அவர்களின் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி இருந்த அந்த மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவருமே புலிகளிடம் கூறவில்லை.
அவர்களுக்கு கூறமுடியாது என்பதை நாம் அறிவோம். புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்திருந்ததுதான் இதற்குக் காரணம். அப்படி கூறியிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.
பிரபாகரனுக்கு இனிமேலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவரது கோழைத்தனமான செயல்களுக்கு இனிமேல் இடமில்லை.
சம்பந்தன் எம்.பி. க்கள் போன்றோர் அரசியல் தீர்வொன்றுக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள்தான். நாமும் அரசியல் தீர்வையே விரும்புகிறோம். எனினும் பிரபாகரன் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க முடியாது. பிரபாகரன் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க விடமாட்டார். பிரபாகரனை ஒழித்த பின்னர் எமது நாட்டுக்கேயுரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றார்.


0 commentaires :

Post a Comment