அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கைவிடப்பட்டுள்ள சகல களஞ்சியங்களையும் நெற்குத்தும் ஆலைகளையும் புனரமைப்புச் செய்யுமாறு அமைச்சர் மைதிரிபால சிறிசேன நெல் சந்தைப்படுத்தும் சபையின் புதிய தலைவருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
இத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கைவிடப்பட்டுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்கள், நெற்குற்றும் ஆலைகள் புனரமைப்புசெய்வதற்கான ஆய்வு நடவடிக்கைகளை சபையின் தொழில் நுட்ப அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். இதற்குத் தேவையான நிதி உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ முன்வந்துள்ளதாக சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சிறுபோக நெல் அறுவடையின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து முழு நெல்லையும் உத்தரவாத விலையில் சபை கொள்வனவு செய்யவேண்டுமென்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே திட்டமிட்ட பிரகாரம் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விதை நெல், உரவகைகள் அந்தந்த பிரதேசத்திலுள்ள கமத்தொழிற் சேவை நிலையங்களினால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
0 commentaires :
Post a Comment