கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நெடுஞ்சாலை மிக முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான பிரதான வீதி கார்பட் வீதியாக செப்பணிடப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிள்ளையாரடி முதல் 5ம் கட்டைவரையான கிட்டத்தட்ட 14கிலோமீற்றர் பாதை புணரமைப்புச் செய்யப்படவுள்ளது. அதாவது ஏற்கனவே இருக்கின்ற பாதைகளை விரிவுபடுத்தி மழைநீர் வடிகான்கள் அமைத்து அழகான தெரு விளக்குகளை இட்டு அலங்கரிக்கப்படவுள்ளது. இப்பாதையானது இருமருங்கிலும் சுமார் 10.4 மீற்றர் மொத்தமாக 20.8மீற்றர் பாதை விரிவு படுத்தப்படவுள்து.
இதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிலையில் பாதையின் அருகில் இருக்கின்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன சில அகற்றப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் உரிமையாளர்களை அழைத்து அவர்களின் சம்மதம் கேட்கும் கூட்டம் இன்று மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் இடம் பெற்றது. இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்,மாவட்டச் செயலாளர் ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். இதற்கு அனைத்து உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
மேலும் குறிப்பாக பொது இடங்களை அகற்றுவதற்கு நஸ்டஈடு வழங்குவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.நாளை அகற்றவேண்டிய இடங்களை ஆர். டீ. ஏ. அடையாளப்படுத்தும். அதன் பின்னர் அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும். இதற்காக உலக வங்கி ஏற்கனவே 4000மில்லியன் ரூபாயினை வழங்கியிருந்தது. ஆனால் தற்போது இடிபாடுகள் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் அதற்காக மேலதிகமாக 600மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. யூன் மாதம் 25ம் திகதிக்குள் இந்த இடிபாடுகள் வேலைகள் அனைத்தும் முடிக்கப்படவேண்டும். 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 commentaires :
Post a Comment