5/05/2009

புல்மோட்டை அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்



புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் வன்னிமக்களுக்காக கிண்ணியா பிரதேச செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் சென்ற குழுவினர் அரிசி,மா,சீனி,பால்மா,பிஸ்கட் வகைகள் உட்பட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை அகதிகள் நலன்பேணல் அதிகாரி சீ. கிருஷ்னேந்திரனிடம் கையளித்தனர்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இடம்பெயர்ந்த 2 ஆயிரம் பேருக்கான இரவு உணவையும் கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் வழங்கினர்.


0 commentaires :

Post a Comment