5/30/2009

கிழக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலானகிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் அலிகார் வெற்றி

கிழக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான மாகாண மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் களு தாவளை மத்திய மகா வித்தியாலய அணியை அலிகார் தேசிய பாடசாலை அணி எதிர்த்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அலிகார் தேசிய பாட சாலை அணி 15 ஓவர்கள் முடிவில் 07 விக்கற்றுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய களுதாவளை மத்திய மகா வித்தியாலய அணி 15 ஓவர்களில் சகல விக்கற்றுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதன் பிரகாரம் 06 ஓட்டங்களால் வெற்றிபெற்று அலிகார் தேசிய பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இதேவேளை ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எல்லே போட்டியிலும் அலிகார் தேசிய பாடசாலை கிழக்கு மாகாண சம்பிய னாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவி ப்பதற்கான விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக பாட சாலை அதிபர் யூ. எச். முகம்மத் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment