இன்று மடடக்களப்பின் ஏறாவூரில் இடம்பெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையுpல் உலகில் இருக்கின்ற அனைத்து மனிதர்களும் எதுவித வேறுபாடுகளுமின்றி கொண்டாடுகின்ற ஒரேயொரு தினம் இவ் மேதினமேயாகும். ஆரம்ப காலங்களில் ஒருமனிதனது உழகை;கும் நேரம், வேதனம், விடுமுறை என்பன தனியொரு மனிதனாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்கள் அனைவருமே அடிமைகளாகவே கணிக்கப்பட்டார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக அதாவது உழைக்கும் நேரத்திற்கு ஒரு வரையறை இருக்கவேண்டும் எனத்தீர்மானித்து போராட்டங்களில் இறங்கினார்கள். அதாவது ஒரு மனிதன் உழைக்கும் நேரம் எட்டு மணித்தியாலங்களாக இருக்கவேண்டும் எனக்கோரி முதன்முதலாக அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் தொழிலாளர்கள் போராட்டங்களில் இறங்கினர்கள். அதன்போது ஏற்பட்ட கலவரத்தில் 07பேர் கொல்லப்படடும்; 66பேர் படுகாயமும் அடைந்திருந்தார்கள். இதனை நினைவு கூர்ந்தே இந்த மேதினம் கொண்டாடப்படுகின்றது. உலகநாடுகளைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றார்களோ அதேபோல் எமது நாட்டிலும் இருக்க வேண்டும். நான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் எமது மாகாணத்தில் இருக்கின்ற தொழிலாளர்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும். அதாவது எமது மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் என்பனவே பிரதான தொழில்களாக இருக்கின்றது. இதனை மேற்கொள்கின்ற தொழிலாளர்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் என்பதனைப் பார்க்க வேண்டும். தற்போது கிழக்கில் ஜனநாயக சூழல் தென்படுகின்ற இச் சந்தர்ப்பத்திலே இனவேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒருமித்துச் செயற்படுகின்ற போதுதான் நாம் எதிர் கொள்கின்ற பிரச்சினைளுக்கு இலகுவாக தீர்வினை எட்டமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட முதல்வர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் பாடசாலை மாணவர்கள் காணாமல் போயிருப்பதானது உண்மையிலே வருத்தமளிக்கின்ற செயலாகும். இதனை யார் புரிந்திருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உரிய தண்டனையினை வழங்க வேண்டும் என நான் பொலிஸாரினைக் கேட்டிருக்கின்றேன். இந்தச் சம்பவமானது உண்மையில் கிழக்கின் சாதாரண நிலையினைக் குழப்ப விரும்புகின்றவர்களின் செயலாகவே நான் பார்க்கின்றேன். அதாவது கிழக்கு மாகாணத்திலே தற்போது அமைதியும் ஜனநாயகமும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த வேளையிலே அதனை விரும்பாத ஒரு சில விசமிகளே இவ்வாறான வேலைகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டு;ம் நடைபெறாது இருப்பதற்குரிய அனைத்து நடவடி;கையினையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றார்கள். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையினயும் கோரி இருக்கின்றேன். எனவும் குறிப்பிட்டார்.
ஏறாவூர் அனைத்து ஊழியர் சங்கத்தினது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் மேதின ஊர்லமும் பொதுக்கூட்டமும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர்அலி, மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், ஜவாஹிர் சாலிஹ் மற்றும் தொழிற் சஙகப்பிரதிநதிகள், தொழிலாளர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment