மட்டக்களப்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி தினுஷிகாவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பில் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும், அரச தனியார் காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், பொதுச் சந்தைகள் என்பனவும் மூடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளும் தினுஷிகாவின் கொலையை கண்டித்து மூடப்பட்டிருந்தன.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், ஏறாவூர் பாடசாலைகள் மாணவர் ஒன்றியம் என்பன பாடசாலைகளை மூடி தினுஷிகாவுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
நேற்றைய ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பில் வாகனங்கள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
மட்டக்களப்பு பஸ்தரிப்பிடம் வெறிச்சோடிக்காணப்பட்டன. இதே நேரம் தினுஷிகாவின் கொலைச்சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment