5/07/2009

வவுணதீவில் ஆசிரியர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத் தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் நேற்றுக்காலை (06.05.2009) பாடசாலை ஆசி ரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வவுணதீவு பாவற்கொடிச் சேனையிலுள்ள பாவற் கொடிச்சேனை பாடசாலை யில் கடமையாற்றும் பால சிங்கம் ரவீந்திரராசா (33) எனப்படும் ஆசிரியரே இதில் கொல்லப்பட்டவரென வவு ணதீவுப் பொலிஸார் தெரி வித்தனர்.
மட்டக்களப்பு ஊறணி யில் வசித்து வரும் இவ் ஆசிரியர் நேற்றுக்காலை பாடசாலைக்க சென்று கொண்டிருந்த போது 7.20 மணியளவில் கண்ணங்குடா பிள்ளையாரடியில் வைத்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுச் சென்றுள் ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான இவ் ஆசிரியர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
பட்டதாரி ஆசிரியரான இவர் மங்கிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், தற்காலிகமாக மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


0 commentaires :

Post a Comment