5/17/2009

தப்பிக்க முடியாதவாறு புலிகள் முடக்கம் பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்

தப்பிச் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து நூற்றுக் கணக்கான புலி உறுப்பினர்கள் சரணடையத் தொடங் கியுள்ளனர்.
புலிகளின் தற்கொலை படையணியைச் சேர்ந்தவர்க ளும் இவர்களுள் அடங்குவதாக இராணுவத்தினர் தெரி விக்கின்றனர். பெரும்பாலும் சிறுவர் போராளிகளே உள்ளதாகவும் இவர்கள் அனைவரது தலைமுடி புலித் தலைமைகளினால் வேண்டுமென்றே கட்டாயமாக கத்தரிக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின் றனர்.
சில புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு முன்னர் தமது கைகளிலுள்ள துப்பாக்கிகளை கடலேரிக்குள் வீசிவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எப்பகுதிக்கும் தப்பிச் செல்ல முடியாதவாறு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ள புலித்தலைவர்கள் இறுதி நேரத்தில் பாரிய தற்கொலைத் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவரு கிறது என படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபாகர னையும் அவரது சகாக்களையும் இலக்கு வைத்தே 58, 59, 53 ஆவது படையணிகள் சுற்றி வளைப்புகள், முன்ன கர்வுகளை மேற்கொள்வதாகவும் பிரபாகரன் இந்த பகுதி யில் இருப்பது ஊர்ஜிதம் என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கடற் புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல எத்தனித்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக எவரும் தப்பிச் செல்ல முடியாதபடி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.
கடற் புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்திய தேவி, மகன் சிவனேசன் மணியரசு, மகள் சிவனேசன் சிந்து, மருமகள் சி. தவராசா, பெறா மகன் சிலம்பரசன், கடற்புலிகளின் மற்றுமொரு தலைவரான ரூபனின் மனைவி என். சிவநேசன் உட்பட 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபா பணமும் 2 1/2 கிலோ எடை கொண்ட தங்க நகைகளையும் கடற்படை யினர் கைப்பற்றினர். தனது கணவர் சூசையும், பொட்டு அம்மான் உட்பட முக்கியஸ்தர்களும் பாதுகாப்பு வலய த்தினுள்ளேயே இருப்பதாக சூசையின் மனைவி சத்திய தேவி தெரிவித்துள்ளார்


0 commentaires :

Post a Comment