மோதல் பகுதிகளிலிருந்து பெருந் தொகையான சிவிலியன்களை அரசாங்கம் வெளியேற்றியுள்ளமையானது, இலங்கைப் பிரச்சினையில், இரத்தக் களரியைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கியுள்ளதாக ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜே நம்பியார் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பில் தங்கியிருக்கும் விஜே நம்பியார் நேற்று (22) கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவர், இறுதிக் கட்ட மோதல் நடை பெற்ற பாதுகாப்பு வலய பகுதியை விமா னத்திலிருந்தவாறே பார்வையிட்டு விட்டுத் திரும்பினார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்த நம்பியார், (8ம் பக்கம் பார்க்க)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், மனிதநேய முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்தார்.
புலிகளுடனான ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தமை தொடர்பில் எந்தக் கேள்விக்கும் இடமில்லையெனத் தெரிவித்த விஜய் நம்பியார், இது இலங்கையின் வரலாற்றில் முக்கிய திருப்பமாகுமென்றும் தெரிவித்தார். அதேநேரம், இலங்கையின் மீள்கட்டுமான பணிகளுக்கு ஐ. நா. உதவுமென்று தெரிவித்த அவர், மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும் ஒத்துழைப்புகளை நல்குமென்றும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment