சுனாமி அனர்த்தத்தின் பின் இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளை மறந்து உதவியது போன்று வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவவேண்டும்.
கடந்தாண்டு முற்பகுதியில் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர ஆரம்பித்த மக்களின் ஓட்டம் கிளிநொச்சியைத் தாண்டி முல்லைத்தீவு வரை நீண்டு புதுமாத்தளன் கரையில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. மக்களின் நீண்ட பயணத்தில் ஒரு கோடை காலமும், ஒரு மாரி காலமும் முழுமையாக மரங்களின் கீழும் தற்காலிக கூடாரங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பொதுமக்களின் உயிரிழப்புகள் குறைவாக இருந்தபோதிலும் போசாக்கான உணவோ, தேவையான மருத்துவ வசதிகளோ இல்லாத நிலையில் தாக்குதல் அச்சம், புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, கட்டாய வேலை வாங்கல் என்பவற்றாலும் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்களின் ஓட்டத்தின்போது பல நெருக்கடிகளுக்கு நாளுக்கு நாள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. உயிரிழந்தவர்கள் ஒருபுறமிருக்க காயமடைந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், உயிரை பறி கொடுத்தவர்களின் எண்ணிக்கையை இன்றுவரை கணக்கிடமுடியாதிருக்கிறது. இந்நிலையில் மக்களின் அவலங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் பல்வேறு தரப்புக்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
புலிகளை மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கிவிட்ட படையினர், பொதுமக்களை மீட்கும் பணியிலும் வெற்றிகண்டு வருகின்றனர். படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில் புலிகளின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்கவென மோதலற்ற நிலப்பகுதி ஒன்றையும் அறிவித்திருந்தது. மக்களின் பாதுகாப்பு கருதி அறிவித்த இப்பகுதி தற்போது புலிகளின் மரணப் பொறியாகவும், சிறைக் கூடமாகவும் மாறியிருக்கிறது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் இவ்வேளையில் அம் மக்களையே தமது பாதுகாப்பு அரணாகக் கருதும் பலிகள் அங்கிருந்து மக்கள் வெளியேற விடாமல் தடுத்து வருகின்றனர். தப்பிச் செல்ல முற்படும் அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். தற்கொலைத் தாக்குதல் நடாத்தி வருகிறார்கள். மக்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து கொண்டு இராணுவத்தினர் மீது தாக்குதல்களையும் நடத்துகின்றனர்.
இவ்வாறு பொதுமக்கள் மீது கிஞ்சித்தும் அக்கறையோ, ஈவிரக்கமோ எதுவித மனிதாபிமானமும் இன்றி தமது பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டே புலிகள் செயற்பட்டு வருகின்றனர். புலிகள் ஊடகங்கள் மீதுகொண்டிருந்த மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி மோதல்களில் சிக்கி உயிரிழக்கும். காயமடையும் மக்களின் அவலங்களை பிரசாரப்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடுவதிலும், வெளியுலகத்தில் ஆதரவு தேடுவதிலும் ஈடுபட்டார்கள். இதில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றார்களாயினும் ஏப்ரல் 20ம் திகதி பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து தப்பிவந்த பின்னரே அங்குள்ள உண்மை நிலவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி, கசக்கி பிழிந்து மோசமாக நடாத்திய புலிகளை, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாங்களே என பெருமை பேசிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் புலிகளின் இந்நடவடிக்கைகளை மூடிமறைக்கும் பிரசாரங்களை வெளிப்படையாக மேற்கொண்டு வந்தனர்.
மக்கள் புலிகளால் கேடயங்களாக்கப்பட்டிருப்பதை நிராகரித்தார்கள். கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு சிறுவர் சிறுமிகள் பலிக்கடாக்களாக்கப்படுவதை மறுத்தார்கள். படையினரின் தாக்குதல்களில்தான் அதிகளவிலான மக்கள் கொல்லப்படுவதாகவும், பட்டினியால் பலியாவதாகவும் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளெங்கும் சென்று பிரசாரங்களில் ஈடுபட்டார்கள்.
ஆனால், மோதல் வலுக்கும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றோ, பாதுகாப்பு வலய பகுதிகளிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடாத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றோ ஒரு வார்த்தைதானும் கூற முன்வரவில்லை. எனவே புலிகள் மக்கள் மீது காட்டிவரும் அக்கறையை போன்றே, மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் இந்த எம்பிக்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறையும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
புலிகளினது தடையை உடைத்துக்கொண்டு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தப்பி வந்தார்கள். கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலரின் இருட்டடிப்பு பிரசாரங்களுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் மக்கள் சாரை சாரையாக வந்ததை காணக்கூடியதாக இருந்தது. படையினரின் உதவியோடு புதுமாத்தளன் பகுதியிலிருந்து வந்த இம்மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பெரும் எடுப்பில் மக்கள் வரும்போது அவர்களின் நலன்களைக் கவனிப்பதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். புலிகளின் அடக்குமுறைக்குள் இருந்த இம்மக்களுக்கு உயிருடன் வந்து சேர்ந்திருக்கிறோம் அதுவே மனதிற்கு பெறும் ஆறுதல் அளிப்பதாக அம்மக்கள் உணர்கின்றனர்.
பெருந்தொகையான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, இன, மத வேறுபாடுகளை கடந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து பலரும் உதவிகளை வழங்க முன்வந்திருக்கிறார்கள். எனினும் முன்னர் புலிகளுக்கு கப்பம் வழங்கி அவர்களின் கொலைக் கலாசாரத்தை ஊக்குவித்தவர்கள் இன்னமும் மெளனமாக இருப்பது போலவே தோன்றுகிறது. தமிழ் அமைச்சர்கள், வர்த்தகர்கள், சமூக நல நிறுவனங்கள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். அவர்களின் துயர் துடைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தையும் வலியுறுத்தி வரும் சிலர் அந்த மக்கள் கூடிய விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர ஆவன செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் புலிகளால் பலவந்தப்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஒரு வார்த்தை கூட சொல்லாது அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களது தாயகப் பகுதியில் வாழும் உரிமை உள்ளவர்கள் என கோட்பாட்டு விளக்கம் கொடுத்த கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர். கிளிப் பிள்ளைகளாக புலிகள் சொன்னதையே திருப்பிச் சொல்லி அவர்களின் செயல்களை நியாயப்படுத்தினார்கள்.
உயிரை வெறுத்து சொத்துக்களை இழந்து, காயங்களுக்கு உள்ளாகி தமது சொந்த முயற்சியால் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பிவந்து, அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பின்னரே இந்த மக்கள் மீது அக்கறை பிறந்திருக்கிறது. மக்கள் மீதான உண்மையான அக்கறை இருக்குமாயின் தப்பிவந்த மக்களை காட்டிலும் பன்மடங்கு அதிக நெருக்கடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில், 10 கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் புலிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள மக்களை வெளியே விடுமாறு முதலில் கோர வேண்டும்.
தப்பிவந்த மக்கள் சிக்கியுள்ள தம் உறவுகள் பற்றியே ஒவ்வொரு கணமும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ல்லைத்தீவிற்கு இடம்பெயர்ந்திருந்த வன்னி மக்களுக்கு உதவ உணவு மருந்து என்பவற்றை ‘வணங்கா மண்’ என்ற கப்பலில் அனுப்பிவைக்கப் போவதாக தெரிவித்து உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும், அங்குள்ள கோயில்கள், வர்த்தக நிலையங்கள், தொழிலகங்களிலிருந்தும் பெருமளவு நிதியையும், பெருமளவு பொருட்களையும் திரட்டினார்கள். வெளிநாடுகளில் வாழும் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களே இதனை முன்னின்று மேற்கொண்டாலும், கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் வெளிநாடுகளில் வாழும் மக்கள் வன்னியில் அல்லலுறும் மக்களுக்கென மிகுந்த கரிசனையோடும், ஈடுபாட்டோடும் உதவிகளை வழங்கினர். இன்றுவரை திரட்டப்பட்ட நிதியோ, பொருட்களோ அல்லல்படும் மக்களை வந்தடையவில்லை. எனவே மக்களின் பேரால் திரட்டப்பட்ட இந்த நிதியும், பொருட்களும் சட்ட ரீதியான வழிகளில் அனுப்பிவைக்கப்பட வேண்டும். முல்லைத்தீவு, புதுமாத்தளனிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பிவந்துள்ள பெரும்பாலான மக்களின் கைகளுக்கு அந்த உதவிகள் சென்றடைய வேண்டும்.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் கஷ்டங்கள் குறித்து பேசும் கூட்டமைப்பு எம்.பிக்கள் அந்த கஷ்டங்களை படிப்படியாகவேனும் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்களா? அல்லது இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை பிச்சைக்காரனின் புண்ணாக பாவித்து இனியும் தமக்கு ஆதாயம் தேடப்போகிறார்களா?
அரசியல்வாதிகளின் தகிடுதத்தங்கள், குறுகிய நோக்கங்கள், சுயலாப நடவடிக்கைகளை புறந்தள்ளி சுனாமி தாக்குதலின் பின் இன, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது போன்று, இடம்பெயர்ந்து வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நலன்புரி நிலையங்களில், பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான உணவு, உடை, குடிநீர், சுகாதார வசதிகள் மேம்படுவதற்கு பங்களிப்பு செய்வதுடன், அந்தமக்கள் கூடிய விரைவில் தனிப்பட்ட வீடுகளில், சொந்த பிரதேசங்களில் சென்று குடியமர்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு வலியுறுத்துவதும் நம் அனைவரதும் கடமையாகும். இதன் மூலம் வன்னி மக்களின் நீண்ட இடப்பெயர்வு பயணத்திற்கும், துயரத்திற்கும் முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும்.

0 commentaires :
Post a Comment