5/17/2009

இந்தியத் தேர்தல்: மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் இலங்கை விவகாரம் பிசுபிசுப்பு; வைகோ படு தோல்வி







இந்தியாவில் நடந்து முடிந்த 15வது பாராளு மன்ற பொதுத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூடுதலான ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ், திரா விட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி 260 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.


பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மூன்றாவது அணி 58 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 64 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனித்து மாத்திரம் 200 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. ஆதரவு கட்சிகளுடன் சேர்ந்து 272 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைப்பதால், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதன்படி, பிரத மராக மீண்டும் மன்மோகன் சிங் பதவி ஏற்பா ரென காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், டில்லி போன்ற மாநிலங்க ளில் காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்ததைவிட வும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியீட்டியுள்ளது.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி -260
தேசிய ஜனநாயக கூட்டணி -161
மூன்றாவது அணி -58
நான்காவது அணி -64


கடந்த 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 417 தொகுதிகளில் போட்டியிட்டு 145 தொகுதிக ளில் மாத்திரமே காங்கிரஸ் வெற்றியீட்டியது. இந்தத் தேர்தலில் 55 தொகுதிகளில் காங்கிரஸ் கூடுதலான வெற்றியைப் பெற்றுள்ளது.
குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்த வரை இலங்கை பிரச்சினை பிசுபிசுத்திருப்பதாகவே தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன. தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்த ம. தி. மு. க. பொதுச் செயலாளர் தோல்வியடைந்துள்ளார்.
அதேநேரம் டாக்டர் ராமதாஸ் தலைமையி லான பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் எந்தத் தொகுதி யிலும் வெற்றி பெறவில்லை.
தமிழகத்தில் 27 தொகுதிகளில் தி. மு. க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ. தி. மு. க. 12 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த முறை தி. மு. க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா. ம. க. ஐந்தாண்டுகள் மத்திய ஆட்சியில் இடம்பெற்று விட்டு தி. மு. க. கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலில் அ. தி. மு. க. கூட்டணியில் இணை ந்து ஏழு தொகுதிகளில் அக்கட்சி போட்டியி ட்டுத் தொல்வியடைந்துள்ளது.
இதே போன்று, காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்களான ப. சிதம்பரம், மணிசங்கர் ஐயர் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
நேற்று முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மாலை 4.15 இற்குக் கூட்டமொன்றை நடத்தினார். பின்னர் செய்தி யாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், காங் கிரஸ் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப் படுத்தியிருக்கிறார்களென்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் வெற்றியடைந்திருக்கிற தென்றும் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன் தெளிவானதும், நேர் மையானதுமான அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றியாகுமென்று குறிப்பிட்டார். நாளைய தினம் விசேட அமைச்சரவைக் கூட்டத்தையும் பிரதமர் கூட்டியுள்ளார்.
இந்தியாவின் 543 தொகுதிகளுக்கான பாராளு மன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியி லிருந்து இம்மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெற்றது.
556 பெண்கள் உட்பட எண்ணா யிரத்து 70 பேர் போட்டியிட்டனர்.
காங்கிரஸ், பா. ஜ. க., மூன்றாவது அணி, 4வது அணி என நான்கு முனைப் போட்டி நிலவியது. 71.3 கோடி வாக்காளர்களில் சுமார் 60% பேர் வாக்களித்துள்ளனர்.
8 இலட்சத்து 28 ஆயிரத்து 804 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்றது. இதில் 11 இலட்சம் மின்னணு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.
நடிகர்கள் தோல்வி
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தே. மு. தி. க. தனித்து போட்டியிட்டது. இதில் அனைத்து இட ங்களிலும் தோல்வியை தழுவியது.
இந்த தேர்தலில் களம் இறங்கிய டி. ராஜே ந்தர் (கள்ளக்குறிச்சி), நடிகை ரோஜா, மன்சூர் அலிகான் (திருச்சி), கார்த்திக் (விருதுநகர்) ஆகிய நடிகர்கள் தோல்வியை தழுவினார்கள்.
ஐந்து இடங்களில் போட்டியிட்ட சரத் குமார் கட்சிக்கும் ஒரு தொகுதியும் கிடைக்கவி ல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராய ணசாமி 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் பதிவான 6,08,092 வாக்குகளில் நாராயண சாமி 3,00,391 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா. ம. க. வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் 2,08,619 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
நேற்றுக் காலை எட்டு மணிக்கு 543 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணும் பணிகள் 1080 நிலையங்களில் ஆரம்பமாகின. இதில் 60 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். காலை 8.30 இற்குப் பின்னர் முன்னணி நிலவரம் பரபரப்பாகியது.
தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி முன்னரைவிட சற்று வலுவான பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் என்று ஏற் கனவே சோனியா அறிவித்திருந்தார். அதன்படி மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் பதவியேற்கவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் இரண்டாவது தடவை தொடர்ச்சியாக பிரதமர் ஆவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங்குக்கு நேற்றுக் காலை முதலே நாடெங்கும் இருந்து வாழ்த்துக்கள் வந்தபடி இருந்தன.
காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று இருப்பது மூத்த தலைவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடி னார்கள்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலை ரோடு விழாக் கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண் டாடினார்கள்.
மேள தாளம் முழங்க காங்கிரஸ் தொண்டர் கள் உற்சாக நடனம் ஆடியபடி இருந்தனர். நாடெங்கும் காங்கிரஸ் அலுவலகங்களில் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
தேர்தலில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கின்ற வெற்றி இல ங்கை விவகாரம் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறதென தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் கூறினார்.
புலிகளுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக் கப்படும் இராணுவ நடவடிக்கை யை எதிர்த்து தமிழ்நாட்டில் பெரும் ஆர்ப்பாட் டங்களும் கோஷங்களும் எழுப்பப்பட்டு வந்தன. இது தேர்தலில் உணர்வலையை ஏற்படுத்தியிரு க்கிறதா? என கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘இலங்கைப் பிரச்சினை தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை’ என்றார்.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி. மு. க. வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் தயாநிதிமாறன் (தி. மு. க.), எஸ். எம். கே. முகமது அலி ஜின்னா (அ. தி. மு. க.), வி. வி. ராமகிருஷ்ணன் (தே. மு. தி. க.) ஆகியோர் போட்டியிட்டனர்.


0 commentaires :

Post a Comment