5/21/2009

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் –எஸ்.எம்.எம் பஷீர்




(பாகம் -2)


மீசைக்காரச் சிங்களவன் என்ற தலைப்பு பிறந்ததே ஒரு ஊர்ஜிதமற்ற செய்தியிலிருந்துதான். ஒரு நண்பர் கூறினார் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து மஹிந்த அரசு கிழக்கில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தபோது மஹிந்த ராஜபக்ஸ பிரபாகரன் இதுவரை மீசைக்காரச் சிங்களவனைப் பார்க்கவில்லை என்று கூறியதாக. யோசித்துப் பார்த்தால் ஜே.ஆரோ, பிரேமதாசாவோ அன்றி டிங்கிரிபண்டாவோ ஏன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவோ மீசை வைக்காத சிங்களவர்கள் தான். நான் அவர்களில் ஒருவன் அல்ல என்பதனை மஹிந்த இன்று நிரூபணம் செய்துவிட்டார். யூத சமூகம்போல் நாங்களும் மூளை வலுக்கூடியவர்கள.; புலம்பெயர்ந்தும் வளமுள்ளவர்கள் என்று பெருமைகொண்ட புலம்பெயர் புலித் தமிழர்கள் இன்னும் பிரபாகரன் சாகவில்லை போராட்டம் தொடரும், தமிழீழம் மலருமென்று கூக்கரலிடுவதன்மூலம் இவர்கள் அனைவருமே மூளையற்ற தமிழர்களா என்னும் சந்தேகமே எற்படுகின்றது. நல்லவேளை இவர்களிடம் பிரபாகரனின் உடலம் கிடைத்திருந்தால் அதனை மம்மிபண்ணி பாதுகாத்து வணங்குவார்கள்போல் தோன்றுகிறது. 1959 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் திகதி “ஈழம் எங்கள் தெய்வம”; என்னும் நூலினை வெளியிட்டதுடன் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் சிறுபான்மையின மக்களை அனுமதிக்கவிடாது தடியடி நடாத்தி அடங்காத் தமிழன் என்னும் பெயரினைத் தக்கவைத்துக் கொண்டவர்.அதுமட்டுமன்றி மலையக மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைச்சுப்பதவிகளை வகிக்கமுடியாதவாறு மீசை வைத்த சிங்களவர் திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களுக்கு உதவிபுரிந்தவரும் இந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்தான் இவரின் மறுபக்கம் மகாராணிக்கு கணிதம் கற்பித்து மகாராணி கையுறையின்றி இவரின் கையைக் குலுக்கும் வாய்ப்பினையும் பெற்றவர். இந்த உயர்நிலை மனிதர்கள் அவர்களின் வாரிசுகள் அடங்காத் தமிழர்கள். ஆனால் தேவை ஏற்பட்டால் அடிக்கவும், கடிக்கவும் செய்பவர்கள். இன்றுவரை தமிழர்களுக்கு நடந்த அவலங்களுக்கு 30 வருடங்களாக இலங்கையில் கொலையும், கொள்ளையும் பொருளாதார அழிவுகளும் எற்பட்டமைக்கு ஆயதந்தாங்கிய பலர் காரணமாயிருந்திருப்பினும் அவர்கள் திருந்தி ஜே.வி.பி கூட ஜனநாயகத்திற்கு திரும்பியபோதும் திருந்த முடியாத புலிகள் தமது அஸ்தமனத்தடன் தம்மை நம்பிய தமிழ் மக்களையும் அழித்துவிட்டே போயிருக்கிறார்கள். சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் திருமலையில் க.வே பாலகுமாரன் தமிழ் மக்களைப் பாhத்து நிம்மதியாக தூங்குங்கள் நாங்கள் (புலிகள்) உங்களைப் பாதுகாப்பார்கள் ”யாமிருக்க பயமேன் என்று கூறிய புலிகள”; அம்மக்களை தமது பாதகாப்பு அரணாக அமைத்து அவர்களை அழிக்கச்செய்து விழிப்பேயின்றி நிரந்தரமாய் தூங்கிப்போனார்கள். புலம்பெயர் தமிழர்கள் தமது அறிவையும், வளத்தையும் பிரயோகித்து தமது மக்களை மட்டுமல்ல புலிகளையும் உருவாக்கி அழிக்கப்பண்ணிவிட்டார்கள். அடுத்த அழிவுத் திட்டத்திற்கு மீண்டும் தயாராகின்றார்கள். ”யாழ் குடாநாடினது வீழ்ச்சிதான் தமிழீழத்தின் இறுதிப்போர் 40 ஆயிரம் சிங்களப் படைகள் உள்ளன. இவர்கள் இங்கிருந்து தப்பிப்போகும் ஒரேயொரு வழி கடல்பாதை மட்டும்தான். இந்தக் குடாநாட்டினது வீழ்ச்சிதான் தமிழீழ விடுதலைப்போரின் இறுதிப்போராயிருக்கும். என்று சூளுரைத்து பேருரையாற்றிய சூசை” இன்று குடாநாட்டிலே என்று குறிப்பிட்டு மூன்றரை வருடத்துள் முல்லைத்தீவு கடற்பாதையையேனும் பாவிக்க முடியாமல் தமிழீழக் கனவையே சேர்த்தழிக்கும் இறுதிப்போர் நடந்து முடிந்திருக்கின்றது. சுமாதான காலத்தில் 2003 ல் நான் இலங்கை சென்றபோது மனித உரிமை செயற்பாட்டாளரென அறியப்பட்ட புலி சார்hன லண்டனில் இயங்கும் தமிழர் ஸ்தாபனமொன்றின் முக்கிய பிரமுகர் அயர்லாந்தில் இருக்கும் முரண்பாடுகளுக்கும், தீர்வுகளுக்குமான சர்வதேச நிறுவனத்தின் பிரமுகர்கள் இருவருடன் இலங்கை வந்திருந்தார்கள். என்னையும் புத்தளம் அகதிகள் முகாமிற்குச் செல்லும் பயணத்தில் இணைந்துகொள்ளக் கேட்டபோது கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தளத்திலுள்ள வடமாகாண அகதிகளைச் சந்தித்த பின்னர் வடக்குநோக்கிய தமது பயணத்தை தொடர்ந்து புலிகளின் பொலிஸ் மா அதிபர் நடேசனைச் சந்திக்க புறப்பட்டனர். என்னையும் அந்த மனித உரிமைவாதி அழைத்தார். அதற்கு நான் ஏனென்று கேட்டேன் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைபற்றி அவர்களுடன் கதைக்கலாம், அப்பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறை கட்டமைப்புபற்றி ஆராயலாம் என்றெல்லாம் என்னை தூண்ட முயன்றார். ஆனால் நான் புலிகளுக்கும் அவர்களின் பொலிஸ் அதிகாரப் பிரயோகத்திற்கும் கிழக்கு முஸ்லிம்களின் பிரதேசத்தில் இடமில்லை. உங்களது பொலிஸ்சேவையினை உங்களது பிரதேசத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை என புத்தளத்திலிருந்தே நான் கொழும்பிற்கு திரும்பிவிட்டேன். அந்த நடேசன் இன்று மாமனிதராக மரிக்காது தமிழ் சமூகத்திற்கு இறுதிவரை பொய்யுரைத்தே உத்தியோகபூர்வ மரணச் சடங்கின்றி மடிந்துபோனார். வடமாகாண புத்தளம் வாழ் முஸ்லிம்களின் சோகக்கதைகேட்டு புலிகளிடம் நியாயம் கேட்கப்போன அந்த இரு வெள்ளையர்கள் மீண்டும் முகங்காட்டவே இல்லை.; இந்த அடங்காத் தமிழர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்பற்றி இன்று சிலாகித்துப் பேசுகிறார்கள். சர்வதேச நீதிமன்றக் குற்றங்களில் கூறப்படும் இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை முஸ்லிம்கள்மீது புலிகள்தான் செய்தார்கள். இப்போது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இருக்கவில்லை அதன் உருவாக்ககாலத்தில் லண்டனில் அதுதொடர்பாக உள்ள விடயங்கள் ஆராயப்படசட்டத்தரணிகள் குழுவில் சிலகாலம் நானும் அங்கம் வகித்தேன். அதனையொத்த குற்றத்தை புலிகள் 2006 ல் மூதூரில் செய்தார்கள.; ஆனால் இன்று இந்தக் குற்றவாளிகள் உயிருடனில்லை. தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.; சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு இதனைவிட குறைந்த தண்டனையைத்தான் வழங்கியிருக்கமுடியும். புலம்பெயர் புலிகளின் பேச்சாளர்களான எரிக் சொல்ஹெய்ம் இன்று தமிழர்களுக்கு சயாட்சி வழங்கத் தவறினால் போராட்டம் வேறு வழியில் தொடரலாமென எச்சரிக்கை விடுத்துள்ளார். நோர்வே அரசின் மூக்கு நுழைப்பு இந்த 30 ஆண்டுகாலப் போராட்டத்துடன் தொடங்கியது. நோர்வே அரசாங்கம் இலங்கையில் 1970 ற்கு பிந்திய காலத்தில் நோர்வேயின் சீனோர் (ஊநலழெச) உத்தியோகஸ்தர் ஒருவர் சிங்கள 1977 இனவன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்மீது பரிவுகொண்டு தான் அங்கு சேவையாற்றியமையை பயன்படுத்தி ஆயத போராட்டத்தில் ஆர்வங்கொண்ட தமிழ் சக்திகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தனி நாட்டுப் போராட்டத்தினை ஆதரித்த அதற்கான பயிற்சி வழங்கி உதவுவதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தில் பாரிய நிலப் பிரதேசத்தினை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை அறியமுடிந்தது. அவரது வேண்டுகொளை ஏற்ற தீவிரவாத இளைஞர்கள் த.வி.கூட்டணி தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களை அணுகி அவர் அன்றைய பிரதம மந்திரி திரு பிரேமதாசாவிடம் சமூக நடவடிக்கைகளுக்காக அவ்வாறான நிலத்தினைப் பெறுவதற்கு முயற்சித்தார். அதுகுறித்து பிரேமதாசா வாளாவிருந்ததனைக்கண்டு அவ்விளைஞர்கள் தொழிற்சங்க வாதியும் பிரேமதாசாவிற்கு நெருங்கியவருமான கே.சி நித்தியானந்தனை அணுகினர். கே.சி ஏன் தன்னிடம் நேரடியாக வரவில்லை என குறைபட்டுக் கொண்டதாகவும் முயற்சித்துப் பார்த்தார். பிரேமதாசா மீண்டும் அதனைக் கவனிப்பதாகக்கூறி வாளாவிருந்துவிட்டார். இதனை என்னிடம் கூறிய மூலச் செய்தியாளர் பிரேமதாசா இக்கோரிக்கை தொடர்பில் சந்தேகப்பட்டிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்..

–தொடரும் ....

0 commentaires :

Post a Comment