முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மர்ஹும் அஷ்ரஃபின் அரசியல் பாதையை விட்டு விலகிச் செல்வதனால் அதிருப்தி கொண்ட மக்கள் தேசிய காங்கிரஸ் பக்கம் இணைந்த வண்ணமுள்ளதாக ஐ. தே. கட்சியின் முன்னாள் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும், தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை அமைப்பாளருமான ஏ. எல். எம். மாஹீர் தெரிவித்தார்.
முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் எஸ். எம். எம். ஹனீபா தலைமையில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் (10) இடம்பெற்ற தேசிய காங்கிரஸில் ஒன்றிணைவோம் எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் அமைப்பாளர் மாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில், மறைந்த தலைவர் அஷ்ரபின் அரசியல் பயணத்தை எமது சமூகத்தின் நலன் கருதி முன்னெடுத்துச் செல்கின்ற ஒரு தலைவராக தேசிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லாவைக் காண்கின்றேன். ஆகவேதான் இன்று முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலாக நாடளாவிய ரீதியில் தேசிய காங்கிரஸ் திகழ்கின்றது. அதனால்தான் இக்கட்சியில் இணைந்து சமூகத்திற்காக பணியாற்றுவதற்காக என்னையும் இணைத்துக் கொண்டு அமைச்சர் அதாஉல்லாவுடன் செயற்பட்டு வருகிறேன்.
மு. கா. தலைமை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதனால் எமது சமூகத்திற்காக எதனையும் சாதிக்கப் போவதில்லை. மாறாக எமது சமூகத்தின் உரிமைக் குரலாக மாறியிருக்கின்ற தேசிய காங்கிரஸின் கரத்தைப் பலப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இவ்விழாவில் ஸ்ரீல. மு. கா. அமைப்பாளர் எஸ். எம். எம். ஹனீபா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ. எல். எம். பாரூக் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
மு.காவில் ஏகாதிபத்தியம் நிலவுகிறது - அமீர்அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏகாதிபத்தியப் போக்கு நிலவுகிறது அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
அமைச்சர் அமீர்அலி தனது பாராளுமன்ற அங்கத்துவப் பதவியை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸில் தலைமைத்துவத்தின் தன்னிச்சையான செயற்பாடு களுக்கு எதிராக கருத்துத் தெரி விக்கும் எவரையும் கட்சியில் இருக்க அவர்கள் அனுமதிப்ப தில்லை. ஏதாவது ஒரு காரணம் கூறி கட்சியில் இருந்து நீக்கி விடுகிறார்கள். நடு நிலையாகவும் சமூக உணர்வோடும் செயற்படும் பலரைக் கடந்த காலங்களில் கட்சியிலிருந்து நீக்கியிருக் கிறார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி இன்று சில தனி நபர்களின் நலன்களுக்காக செயற்பட்டு வருகிறது. முஸ்லிம் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளுவதை விட்டு விட்டு தனது அங்கத்தவர்களை கட்சியிலிருந்து துரத்தி விட்டு அவர்களுக்கு எதிராக வழக்குப் பேசிக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு வருகிறது.
0 commentaires :
Post a Comment