5/04/2009

உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.




சிறுபான்மை இன மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர் பான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பவன் என்றவகையில் இதில் நாம் மிகத் தெளிவாக உள்ளோம்.
இவ்வாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
ஏறாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணத்திற்கான பிரதான மே தின வைப்பவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் அமீர் அலி மேலும் கூறியதாவது,
உலக ஒழுங்கமைப்பின் வேகமான மாற்றத் திற்கு ஏற்ப அரசியல் நடவடிக்கைகளிலும், தேர் தல் முறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தவகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்த்திருத்தம் என்பது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்படும் ஒரு நடவ டிக்கையாகும்.
இதனை கிழக்கு மாகாண சபையில் தோற் கடிப்பதன் மூலம் எமது மாகாண சபையை நாமே தோற்கடிக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
இந்த சட்ட மூலத்தில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
சிறுபான்மை இன மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இதை அமுல் படுத்துவதில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
இது தொடர்பாக முன்வைக்கப்படும் திருத் தங்களை உள்வாங்குவதற்கு நாம் தயாராக உள் ளோம்.
இந்த உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தில் 5 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளி முறை மீண்டும் 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்த வெட்டுப் புள்ளி முறையை முற்றாக நீக்கி பூச்சியம் சத வீதமாக மாற்றுவது தொடர்பாகவும் பாராளு மன்ற தெரிவுக் குழு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.


0 commentaires :

Post a Comment