5/01/2009

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினம் அனுஷ்டிப்பு




யாழ். நூல் ஆசிரியர் சுவாமி விபுலானந்தரின் 117 வது பிறந்த தினம் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நினைவு கூரப்படவுள்ளது. பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 ஆம் திகதி காலை 7.45 மணிக்கு கல்லடி உப்போடையில் விபுலானந்த அடிகளாரின் சமா தியில் மலரஞ்சலியும் மங்கள ஆராத்தியும் நடைபெறும். மட் டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபை இதனை ஏற்பாடு செய்துள்ளது.
காலை 9 மணிக்கு மட்டக் களப்பு நீதிமன்ற முன்றலில் அமைந்துள்ள அடிகளாரின் சிலைக்கு மாநகர முதல்வர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் மலர்மாலை சூட்டி உரையா ற்றுவார். நினைவுப் பேருரை மாலை 4 மணிக்கு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற வுள்ளது.
நூற்றாண்டு விழா சபைத் தலைவர் பேராசிரியர் மா. செல்வராசா தலைமையில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் சிறப்புரை ஆற்றுவார்.

0 commentaires :

Post a Comment