விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது. தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்
0 commentaires :
Post a Comment