5/14/2009

முதலமைச்சர்கள் மாநாடு




இலங்கையின் மாகாண முதல மைச்சர்கள் மாநாடு மட்டக்கள ப்பில் நாளை பதினைந்தாம் திகதி ஆரம்பமாகிறது. இம்மா நாடு நாளையும் நாளை மறுதினமுமாக இரண்டு தினங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறவிருக்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவ னேசதுரை சந்திரகாந்தன் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடையும் தினத்தில் இம் மாநாடு மட்டக்களப்பில் நடத்தப்படுவது முக்கிய அம்சமாகும்.
அதேசமயம் கிழக்கு மாகாணம் விடுத லைப் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் நிர்வாகம் முன்னெடுத்துச் செல்லப்படுகி ன்ற இன்றைய நிலையில் முதலமைச்சர் கள் மாநாடு மட்டக்களப்பில் நடத்தப்படு கிறது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் உரு வாக்கப்பட்டுள்ள ஜனநாயக சூழலின் அடையாளமாக இம்மாநாட்டை எடுத் துக் கொள்ளலாம்.
வடக்கு-கிழக்கு மாகாண சபை நீண்ட காலமாக செயலிழந்த நிலையில் இருந் தது. கிழக்கு மாகாண சபைக்கு நடத்தப்ப ட்ட தேர்தலையடுத்து கடந்த ஒரு வருட காலமாக மக்கள் பிரதிநிதிகளின் நிர்வா கம் கிழக்கு மாகாணத்தில் திறம்பட இய ங்கி வருகிறது.
வெறுமனே அதிகாரிகளின் செயற்பாட் டுடன் நீண்ட காலமாக இயங்கி வந்த மாகாண சபைக்கு இப்போது மக்கள் பிரதிநிதிகள் கிடைத்துள்ளனர். எனவே, கிழக்கு மாகாண சபையை ஜனநாயகத் தின் வெளிப்பாடாகக் கருதலாம்.
கிழக்கு மாகாண சபையானது கடந்த ஒரு வருட காலத்தில் குறிப்பிடத்தக்க செய ற்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. கிழக்கில் மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் கிழக்கு மாகாண சபை எதிர்பார்க்கப்ப ட்ட இலக்குக்கு மேலாகவே பணியாற் றியுள்ளது.
மாகாண முதலமைச்சர் மற் றும் மாகாண அமைச்சர்களின் அயராத உழைப்பை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
யுத்த சூழலில் சிக்குண்டு மிக நீண்ட காலமாக துன்ப துயரத்தில் வாழ்ந்து வந்த கிழக்கு மக்கள் இப்போது நிம்ம திப் பெருமுச்சு விடுகின்றனர். கிழக்கு முழு மையாக மீட்கப்பட்டதன் விளைவாக அம்மக்கள் அடைந்துள்ள மனநிம்மதி இது வாகும்.
மக்களின் மனநிம்மதியான வாழ்வு ஒரு புறம் இருப்பினும் இரு தசாப்தத்துக்கு மேற்பட்ட யுத்தசூழலானது அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நீண்ட காலத்துக்குப் பின்தள்ளியுள்ள தென்பதை மறுக்க முடி யாது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அம்மக்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை.
அவல வாழ்விலிருந்து கிழக்கு மாகாண மக்கள் படிப்படியாக மீண்டும் வருகின்ற னர். அவர்களது வாழ்க்கைத் தரமும் முன் னேற்றமடைந்து வருகிறது. அம்மக்களின் சுபிட்சத்துக்காக எதிர்காலத்தில் கூடுதல் வினைத்திறனை வெளிப்படுத்த வேண்டி யதொரு பொறுப்பில் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தற்போது உள்ளது.
இத்தகைய நிலையிலேயே முதலமைச்ச ர்கள் மாநாடு மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகிறது. முதலமைச்சர் சந்திரகாந் தன் தலைமையில் நடைபெறும் இம்மா நாட்டில் வடமேல், வடமத்திய, சப்ர கமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கவுள் ளனர். அமைச்சர்கள் சிலரும் இம்மாநாட் டில் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள் ளனர்.
கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை மேலும் அதிகரிப்பதற்கான பலத்தை இம் மாநாடு ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்ப டுகிறது. அதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை வேகமாக மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை வலியுறுத்தவும் இம்மா நாடு உதவுமென எதிர்பார்க்கலாம்.

thinakaran -edito

0 commentaires :

Post a Comment