5/11/2009

முதலமைச்சர் மாநாட்டுக்காக மட்டக்களப்பில் ஏற்பாடுகள்


முதலமைச்சர்களின் 25வது மாநாடு இம்மாதம் 15,16ம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின் றன.

கிழக்கு முதலமைச்சரின் ஆலோசனையுடனும் அவரின் வழிகாட்டலுடன் முதலமைச்சரின் செயலாளர் எஸ். மாமங் கராசாவின் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு இம்மா நாட்டு ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மாநகர சபை உறுப்பினர்கள், அதன் ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பனவும் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன.

இம்முதலமைச்சர்கள் மாநாட்டையொட்டி மட்டக்களப்பு மாநகரம் அலங்கரிக்கப்படவுள்ளதுடன், மாநாடு நடைபெ றும் மண்டபமும் அலங்கரிக்கப்படவுள்ளது. இம்மாநாட் டையொட்டி சிறப்பு கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள் ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந் தனின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் முதலமைச்சர்களின் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பல ரும் பார்வையாளர்களாக அழைக்கப்படவுள்ளனர்.

0 commentaires :

Post a Comment