மோதல் இடம்பெறும் பகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தங்களின் தாக்குதல்களை தொடரும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்
0 commentaires :
Post a Comment