5/08/2009

விடுதலைப் புலிகளே தமிழர்களைத் தாக்குகின்றனர் : திமுக பிரசாரக் கூட்டத்தில் க.அன்பழகன்


விடுதலைப் புலிகள் தமிழர்களைத் தாக்குவதாலும் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலுமே தமிழர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து பண்ருட்டியில் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய வைகோ, ராமதாஸ் இன்று அத்திட்டத்தை தடை செய்ய நினைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமும், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். போரை நிறுத்தச் சொல்ல தமிழகத்துக்கு உரிமை கிடையாது. இந்திய மத்திய அரசுதான் இலங்கை அரசை வலியுறுத்தும். அதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார். விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியாது" என்றார்.


0 commentaires :

Post a Comment