5/06/2009

மாணவி தனுசியாவைக் கொலை செய்தவர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொலை


கடந்த 28ம் திகதி காணாமல் போய் பின்னர் சடலமாக மீடகப்பட்ட மாணவி தனுசிகாவை கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் தங்களிடம்; இறந்த மாணவியினது புத்தகப் பை இருப்பதாகக் கூறி பொலிஸாரை அழைத்து வந்தபோது, அவர்கள் மூவரும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவரும் ஸ்த்தலத்திலே கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றார்கள். மேற்படி உயிரிழந்தவர்கள் மகிந்தன் மயூரன்(24), எட்வெட் யூலியன்(19), சோமசுந்தரம் தனுசன்(20) ஆகியோர் ஆவர். இதன் போது ரி56ரக துப்பாக்கிகள் இரண்டும் ஒரு கைக் குண்டும் பொலிஸாரால் மீடகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் இருக்கின்றன

0 commentaires :

Post a Comment