5/02/2009

வெருகல் பிரதேசத்தில் நடமாடும் மக்கள் வங்கிக் கிளை ஆரம்பம்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் நட மாடும் மக்கள் வங்கிக் கிளையொன்று ஆரம்பிக் கப்படவுள்ளதாக மக்கள் வங்கியின் உயர் அதிகாரி கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத் துரை சந்திரகாந்தன் கலந்து கொண்ட கூட்டமொன்றில் தெரிவித்தனர்.
வெருகல் பகுதியில் மக் கள் வங்கி கிளையை திறக் குமாறு பிரதேச மக்கள் விடுத்து வருகின்ற கோரி க்கை தொடர்பாக முதல மைச்சர் வங்கி அதிகாரி களிடம் வினவிய போதே அவர்கள் இதனைக் குறிப் பிட்டனர். இந் நடமாடும் வங்கிக் கிளை வாரத்தில் இரு தினங்கள் நடை பெறும்
இப்பகுதியில் புதிய வங்கிக் கினையை திறப்ப தற்கு ஆளனிப் பற்றாக் குறை காணப்படுவதாக வும், வங்கி உயர் அதிகாரி யொருவர் குறிப்பிட்டார். இதனால் உடனடியாக வங்கிகளை திறக்க முடி யாதென்றும் அவர் குறி ப்பிட்டார்.
இங்கு வங்கிக் கிளைகள் இல்லாமையால் இங்கு ள்ள மக்கள் சேருநுவர, மூதூர் பிரதேசங்களுக்கு சென்று பெரிதும் சிரமப் படுவதாகவும் பொது மக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந் தனர்.
இதுபற்றி கேட்டறிந்த முதலமைச்சர் வங்கிக்கிளை திறப்பது பற்றித்தான் விசேட கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment