பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இன்று கொழும்பில் மேதின ஊர்வலங்கள் நடத்துவதை ரத்துச் செய்துள்ளன. பாதுகாப்பை கருத்திற் கொண்டே இம்முறை பிரதான கட்சிகளின் ஊர்வலங்கள் ரத்துச் செய்யப்பட்ட போதிலும் கொழும்பிலும் அதன் சுற்றுப் பகுதியிலும் வழமை போல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இருப்பினும், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் கொழும்பிலும் ஏனைய கட்சிகள் வெளிமாவட்டங்களிலும் சிறிய அளவிலான ‘மே’ தின ஊர்வலங்களை இன்று நடத்தவுள்ளன.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (01) அலரி மாளிகையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்வர்.
தமது கட்சிக்காக உழைத்து உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளது. கோட்டேயிலுள்ள சிறுவர் இல்லத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தானம் வழங்கப்படும்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பொரல்லை கெம்பல் பார்க் மைதானத்தில் மாலை 3 மணிக்கு கூடி அங்கிருந்து ஊர்வலமாக விகாரமகாதேவி பூங்காவுக்கு செல்லவுள்ளனர். அங்கு மாலை 4 மணிக்கு கட்சியின் கூட்டம் நடைபெறும். இதற்காக விசேட பொலிஸார் பாதுகாப்பு கடமையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பண்டாரவளையிலும் மலையக மக்கள் முன்னணி கொட்டகலையிலும் தமது மே தின ஊர்வலத்தை இன்று நடத்துகின்றன.

0 commentaires :
Post a Comment