5/17/2009

25வது முதலமைச்சர்கள் மாநாடு இன்று நிறைவு பெற்றது.











கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையயில் இடம்பெற்ற 25வது முதலமைச்சர்கள் மாநாடு இன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற இம் மாநாட்டிற்கு ஏனைய அனைத்து முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தபோதும் தவிர்க்கமுடியாத காரணங்களால் ஊவாமாகாணமுதலமைச்சர் காமினி விஜித விஜயமுனிசொய்சா, சப்பிரகமுவ முதல்வர் மஹிபால ஹேரத் தவிர்ந்த ஏனைய முதலமைச்சர்களான மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம் லால் திஸாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, தென்மாகாண முதலமைச்சர் ஸான் விஜயலால் டி சில்வா, வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேயசிங்க ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இம் முதலமைச்சர்கள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்வருகின்ற 26வது முதலமைச்சர்கள் மாநாடு வடமத்தியமாகாணத்தில் அதாவது அநுராதபுரத்தில் நடாத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அத்தோடு இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இம் மாநாட்டின் நினைவாக கலந்து கொண்ட முதல்வர்கள் அனைவரும் மரம் நட்டு வைத்தார்கள். மேலும் எமது இலங்கைத் திருநாட்டிற்கு நிரந்தரச் சமாதானம் வேண்டி அனைத்து முதலமைச்சர்களும் சமாதான புறாக்களைப் பறக்க விட்டார்கள். முதலமைச்சர்கள் தவிர மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், ஜனாதிபதி மற்றும் திறைசேரி செயலாளர்கள், கிழக்கு முதல்வரின் செயலாளர் சி; மாமாங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.








மட்டக்களப்பில் நேற்று நடந்த 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டில் 48 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாக ஆறு முதலமைச்சர்களும் நேற்று தெரிவித்தனர்.
முதலமைச்சர்கள் மாநாடு நேற்றுக்காலை நடைபெற்றது. 6 முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் முடிவில் நேற்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்கள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 48 பிரேரணைக ளில் பெரும் பாலானவற்றிற்குத் தீர்வு காணப்பட் டுள்ளது. கூடுதலானவை நிர்வாகம் சார்ந்தவை களாகவே இருந்தன. தீர்வு காணப்படாத விடயங்களுக்கு முதலமைச்சர்களின் செயலாளர்கள் பேசித் தீர்வு காண்பார்கள் என்றனர்.
மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக இருதரப்பும் பேசி முடிவெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, 26 வது (அடுத்த) முதலமைச்சர்கள் மாநாடு வடமத்திய மாகாண சபையில் இடம் பெறும். முதலமைச்சர் பேர்ட்டி பிரேம லால் திஸாநாயக்க மாநாட்டின் தலைவராக இருப்பார். மாநாடு செப்டம் பர் 18 ஆம் திகதி வட மத்திய மாகாண சபையில் நடைபெறும். மாகாண சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு நேற்றைய மகாநாட்டில் கலந்து கொண்ட திறைசேரி உட்பட சகல திணைக்கள அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாய க்க குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்குத் தலைமை தாங்கினார்.
இம் மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வட மேல் மாகாண முதலமைச்சர் அத்துலவிஜேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர்கள் சான்விஜய டி சில்வா, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய ஆறு முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இம் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு முதலமை ச்சர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட் டனர்.
இம் மாநாட்டில் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் ஆஜராத் மாநந்தஜீ, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரோ, மட்டக்களப்பு மாவட்ட அகதிய்யா சம்மேளனத் தலைவர் மெளலவி ஏ. எம். அப்துல் காதர் பலாஹி, பாதர் அன்டனி ஜெயராஜ் ஆகியோர் சமய ஆசியுரைகளை நிகழ்த்தினர். மாநாட்டின் தலைமையுரையை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந் தன் நிகழ்த்தினார்.
முன்னதாக “நாதஸ்வரம்” மேளதாளம் முழங்க தமிழ் இன்னியம் களிகம்பு கோலாட்டம் சகிதம் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதலமைச்சர்கள் மாநகர வளாகத்தைச் சென்றடைந்ததும் அவர்களால் தேசியக்கொடிகளும் மாகாணக் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டன. தேசியக் கொடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கிழக்குமாகாணக் கொடியை பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கமும் ஏனைய மாகாணக் கொடிகளை ஏனைய முதலமைச்சர்களும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரி மாணவிகளால் தேசிய கீதமும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளால் தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

0 commentaires :

Post a Comment