மட்டக்களப்பில் இன்றும், நாளையும் (15,16) நடைபெறவுள்ள 25வது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென எட்டு முதலமைச்சர்களும் இன்று (15) மாலை மட்டக்களப்பு நகரை வந்தடையவுள்ளனர்.
(16) நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம லால் திஸாநாயக்க தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜலால் டி சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித விஜியமுனி சொய்சா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் இன்று மாலை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்து மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவென அழைக்கப்பட்டிருந்த மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் நேற்று மாலை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.
இம்மாநாட்டிற்கென குறிப்பிட்ட ஊடகவியலா ளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமை ச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கென இன்று இராப்போசனமொன்று கிழக்கு மாகாண முதல மைச்சரினால் வழங்கப்படவுள்ளது.

0 commentaires :
Post a Comment