கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 14 வது மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு,. அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இவ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை விளையாட்டுப் போட்டிகள் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை போன்ற இடங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெறவுள்ளன.
கபடி, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், பென்னிஸ், சதுரங்கம், கிரிக்கெட், தடகளம், உடற் பயிற்சி உட்பட வேறு சில விளையாட்டுப் போட்டிகளும் வயது அடிப்படையில் ஆண், பெண் அணிகளுக்கிடையே இடம் பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் ஜே. உதயரத்தினம் அறிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment