5/29/2009

20 மில்லியன் ரூபா செலவில் பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.


கல்குடா கல்வி வலயாத்தின் வாகரைப்பிரதேச பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு பௌதீகவள விருத்தி, கல்விநல விருத்தி என்ற தொனிப்பொருளில் நீண்ட கால வேலைத்திட்டங்களாக நடைபெறுகின்றது. கல்குடா வலயக் கல்விப் பணிமனையின் கோரிக்கைக்கு அமைவாக பௌதீகவள விருத்தியின் ஓர் அம்சமாக கண்டலடி பாடசாலையில் GTZ நிறுவனத்தின் நிதியுதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவிலான புதிய பாடசாலைக் கட்டிடத் தொகுதியும், கல்வி அமைச்சின் கீழான நிதியுதவியின் கீழ் நூலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
புhடசாலை அதிபர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன் GTZ நிறுவனத்தின் பிரதம பொறியியலாளர் அன்ரியா, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி .சுபா சக்கரவர்த்தி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணலிங்கம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் மேல் சித்தரவதையுடன் செயற்படுவதன் மூலமும், சமூக,கல்வி விழுமியங்களை புகட்டுவதன் மூலமே கல்வி நிலையில் அபிவிருத்தி காண முடியும். கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் குறிப்பிடுவதற்கு அமைவாக வலயக் கல்விப்பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள் சிறப்பாக செயற்படுகின்ற வேளையிலும், பெற்றோர்கள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. சுமூகத்தில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும், மாணவர்களின் கல்வி நிலை வீழ்சிசிக்கும் இதுவே முக்கிய காரணமாக அமைகின்றது. வாகரைப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கும் 222 ஆசிரியர்களில் 23 ஆசிரியர்கள் மாத்திரமே வாகரைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு காரணியாக அமைவதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையின் வலுவாக்கத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண சபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு விளையாட்டு பயிற்சிகள் மாணவ சுற்றுலாக்கள் தலைமைத்துவ பயிற்சிகள் கல்வி திட்டங்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் பாடசாலைகளுக்கான கணணி வழங்கல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதே போன்று படுவான்கரைப் பகுதிகளுக்கும் புதிய கல்வி வலையம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து இப்பகுதி மாணவர்களின் கல்வி நிலையினையும் விருத்தி செய்ய முடியும் என அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment