5/17/2009

'பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்ற இலங்கைக்கே நான் திரும்பி செல்கிறேன்' ஜீ-11 உச்சிமாநாட்டில் ஜனாதிபதி உரை


கொடூரமான புலிப் பயங்கரவாதிகளிடமி ருந்து விடுதலைபெற்ற இலங்கைத் திருநாட்டு க்கு தான் திரும்பிச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜீ-11 நாடுகளின் உச்சிமாநாடு நேற்று ஜோர் தானில் ஆரம்பமானது. ‘டெட்சீ’ நகரிலுள்ள மன்னர் ஹுசைன் மண்டபத்தில் ஆரம்பமான இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த கொடூர பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் இன்று (நேற்று) முடிவுக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து இலங்கை மக்களுக்கும் துரிதமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது இலக்கு என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜீ-11 மாநாடு தொடர்பாக ஆசிய நாடுக ளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மற் றும் பாகிஸ்தானும், மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோர்தானும் ஆபிரிக்க நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொறக் கோவும் டியூனிஷியாவும் ஐரோப்பிய நாடு களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜோர்ஜியாவும் குறோஷியாவும் மத்திய அமெரிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கொன்ரூராஸ், பரகுவா, ஈக்குவடோர் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் இதில் பங்குபற்றின.
இங்கு உரை யாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
என்றும் தோல்வியடையச் செய்ய முடியாதெ ன்று உலகில் அனேக நாடுகள் நம்பிக் கொண் டிருந்த பயங்கரவாதத்தை மிகவும் குறுகிய கால த்தினுள் முழுமையாக அழித்தொழிக்க இல ங்கை அரசாலும் வீரமிக்க பாதுகாப்பு படையா லும் முடிந்துள்ளது.
இலங்கையின் வீரமிக்க படைகளை உலகின் வேறெந்த நாட்டுப் படைகளுடன் சமப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஒழுக்கமும், மனிதாபிமானமும் நிறைந்த சிறந்த படையாக உலகில் இதனைக் குறிப்பிடலாம்.
கொடூர பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த மிகவும் பாரியளவிலான அப்பாவி மக்களை எந்தவிதமான இடையூறும் இன்றி காப்பாற்றவும் எமது படையால் முடிந்துள் ளது.
30 வருடங்களுக்குப் பின்பு அந்த மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தையும் உரிமையையும் பேணிக் காத்து அவர்களுக்கு அபிவிருத்தியின் அனைத்து இலாபங்களையும் பெற்றுக் கொடுப் பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.


0 commentaires :

Post a Comment