அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்..4 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்(வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 4 பொலிஸார் , 4 மாணவர்கள் உட்பட காயமடைந்துள்ள 11 பேர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா நேற்றிரவு இப்பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இரவு 10 .15 மணியளவில் அமைச்சர் தனது உரையை முடித்து விட்டு திரும்பிய பின்பு கலாச்சார நிகழ்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்ப டையினரும் கடமை முடிந்து அங்கிருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த போது பொலிஸ் கான்ஸ்டபிளொருவரின் தன்னியக்கத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்
5/11/2009
| 0 commentaires |
அக்கரைப்பற்றில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி;11 பேர் காயம்
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்..4 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்(வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 4 பொலிஸார் , 4 மாணவர்கள் உட்பட காயமடைந்துள்ள 11 பேர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா நேற்றிரவு இப்பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இரவு 10 .15 மணியளவில் அமைச்சர் தனது உரையை முடித்து விட்டு திரும்பிய பின்பு கலாச்சார நிகழ்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்ப டையினரும் கடமை முடிந்து அங்கிருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த போது பொலிஸ் கான்ஸ்டபிளொருவரின் தன்னியக்கத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்
0 commentaires :
Post a Comment