5/12/2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (09-05-2009) கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது




தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ. திரு.சி. சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரே~;ட உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
கட்சித் தலைவர் எனும் வகையில் கூட்டத்தினை கௌரவ சந்திரகாந்தன் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கிவைத்தார். இக் கூட்டமானது மக்களினதும் தாய் மண்ணினதும் நலனுக்காய் உயிர் தியாகங்கள் செய்த அனைத்து மாவீரர்கள், மக்கள் அனைவiரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் அவர்களினால் தலைமையுரை ஆற்றப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் தனித்துவத்தை பேணவும் எதிர்காலத்தில் கட்சியை அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை விருத்தி செய்யவும் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது பற்றியும் தீவிரமாக ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரே~;ட உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் இவ்விவாதங்களில் கலந்துகொண்டனர். இறுதியில் கட்சியின் செயலாளர் திரு. எ. கைலேஸ்வரராஜா அவர்களினால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


0 commentaires :

Post a Comment