மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஈரலைக்குளத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். 496 குடும்பத்தினர் இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர்.
இராணுவ, சிவில் இணைப்பதிகாரி ஜானக டி.சில்வா, புனர்வாழ்வு திட்டப்பணிப்பாளர் கே. சிவநாதன், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோர் ஈரலைக் குளத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
அங்கு பல அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அந்த விடயங்கள் பற்றி ஆராய்வதற் காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மீள்குடியேற்ற இணைப்பாளர் அ. செல்வேந்திரன் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment