
உரையாற்றுகையில் கூறியதாவது :- கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைய வேண்டுமானால் கிராமங்கள் அபிவிருத்தி அடைய வேண்டும். அதன் அடிப்படையில் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு விழிப்புணர்வையும் புத்துணர்வையும் ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.கிராமத்தை ஆளுமைப்படுத்தக் கூடிய வகையில் இயங்குகின்றனா என்று கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்னைப் பார்க்க வேண்டும். சில சங்கங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் மட்டும் இருப்பதே இதற்குக் காரணமாகும். கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் பலரை மக்கள் அறியாதவர்களாக உள்ளனர்.
எனவே, பெயரளவுக்கு சங்கங்கள் இருக்க முடியாது. கிராம அபிவிருத்தியை திறம்பட மேம்படுத்துவதற்கான திட்டங்களை நீங்களே வகுத்து அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும். சுயதொழில் கல்வி போக்குவரத்து ஆகிய துறைகளில் ஈடுப


கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை 200 மில்லியன் ரூபா செலவில் விருத்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதுனூடாக கிழக்கு மாகாணத்திற்கு அதிக உல்லாச பயணிகளை வரவழைக்கவுள்ளதாகவும் முதலமைச்சரின் செயலாளரும், மாகாண உள்ளூராட்சி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், கிராம அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளருமாகிய எஸ்.மாமாங்க ராஜா தெரிவித்தார்.
சனிக்கிழமை மட்டக்களப்பு சென்மைக்கல்ஸில் இடம்பெற்ற, கிழக்கின் அபிவிருத்தியினை நோக்கிய கிராம அபிவிருத்தி தந்திரோபாயங்களும் செயற்பாடுகளும் தொடர்பான மாநாட்டை அடுத்து மட்டக்களப்பு கச்சேரியில் ஒழுங்கு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு, 10 மாதத்தினுள் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டம் மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாட்டை விருத்தி செய்தல் போன்ற விடயம் பற்றி அவர் விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பத்து மாதத்தினுள் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி கூறுகையில்;
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் நெக்டெப் திட்ட உதவியுடன் 200 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் இயற்கை அழகு கொண்ட உல்லாச பயணிகளை கவரக்கூடியதாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உல்லாச பயணிகளை கவரக்கூடிய பல இடங்கள் உள்ளன. அவற்றை விருத்தி செய்யவுள்ளோம்.
பாசிக்குடா முதல் உல்லை வரையான கடற்கரைகளிலும் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய பல வேலைத் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
10 மாதத்தினுள் 1242 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், 269 தொண்டர் ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளது. 1000 வேலையற்றவர்களுக்கு பயிற்சி, வாழ்வாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதி, கடன் வசதியினை வழங்க ஐ.ஒ.எம். அமைப்பினூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பாலமீன்மடு முதல் பாசிக்குடா வரையான கரையோர வீதி அமைப்பு வேலைத் திட்டத்தினை கடந்த வாரம் ஆரம்பித்து வைத்துள்ளதுடன் 25 வருடமாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு ஏ5 வீதி திறக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.
7 ஆயுள்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 134 முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 20 வருடமாக செய்கை பண்ணாதிருத்த ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் வயல் நிலத்தை கடந்த பெரும் போகத்தில் செய்கை பண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1000 கிலோமீற்றர் உள்ளூராட்சி வீதிகளை 1760 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்ய ஜப்பானிய “ஜெசிகா’ நிறுவனம் முன்வந்துள்ளது. 15 உள்ளூராட்சி மன்றங்களை முழுமையாக அபிவிருத்தி செய்ய உலக வங்கி முன்வந்துள்ளது.
10 பஸ்களை கிழக்கு மாகாண சபைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றை பொது அமைப்புகளுக்கு வழங்கியுள்ளோம். மட்டக்களப்பு, திருமலை புகையிரத சேவையை நடத்த இந்தியா உதவி செய்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் முதலாவது புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படும்.
பாடசாலைகளுக்கு 1000 கணினிகளை வழங்க முன்வந்துள்ளது. 200 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை நூலகங்களுக்கு வழங்கவும், இந்தியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment