"கடந்த ஞாயிறன்று இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவரும், பொலிஸ் அத்தியட்சகருமான டாக்டர் எச். எல். ஜமால்தீனின் இழப்பு கிழக்குவாழ் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்".
இவ்வாறு, அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனச் செயலாளரும், மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜும்ஆப்பள்ளிவாசல் செயலாளருமான எம். எல். எம். ஜமால் தீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து ள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தன்னிடம் உதவி கேட்டு வரும், மக்களை இன, மத பேதம் பாராமல் அவர்களுக்குரிய உதவிகளைச் செய்துகொடுத்தார். தான் கல்வி கற்கும்போது, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், இளவாலை சென் ஹென்aஸ் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பெற்றமையினால் சிறுபான்மை மக்களான தமிழ் சகோதரர்களை உற்ற நண்பர்களாக வைத்திருந்ததுடன், பொலிஸ் சேவை மூலம் பல அளப்பரிய உதவிகளை அளித்துவந்தார்.
இவரின் இக்கொலையை சகல இன மக்களும் வன்மையாக கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
0 commentaires :
Post a Comment