27 வருடங்களின் பின்பு மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான உதயதேவி கடுகதி ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலை காரணமாக இச் சேவை ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருந்தது கொழும்பு கோட்டையிலிருந்து இன்று முற்பகல் 10.30 ற்க மட்டக்களப்பிற்கான ரயில் தனது முதலாவது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. மாலை 6.30 ற்கு குறித்த ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவிருப்பதாக புகையிரத நிலைய அதிபர் அருணாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார் நாளை காலை 7.45 ற்கு மட்டக்களப்பிலிருந்து மதலாவது ரயில் கொழும்பு கோட்டையை நோக்கி புறப்டப்டு பிற்பகல் 3.30 ற்கு அங்கு சென்றடையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நாளை இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்களான எஸ்.எச்.அமீர் அலி ,மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பலர் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment