4/25/2009

மக்களை மரணத்துள் தள்ள எவருக்கும் உரிமை இல்லை


புதுமாத்தளன் யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து பெரும ளவு மக்கள் வெளியேறிவிட் டார்கள். ஆரம்பத்திலிந்து இது வரை அங்கிருந்து வெளியேறி வந்தவர்க ளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து எழு பத்தையாயிரத்தைத் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இம்மக்களின் அத் தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசாங் கம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. முன் னுரிமை அடிப்படையில் இவ்விடயம் கவனிக்கப்படுகின்றது.
யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து இன் னும் வெளியேறாமல் பத்தாயிரம் பேர் வரையில் இருப்பதாக அங்கிருந்து கிடை க்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனால் தீவிரமான தாக்குதல் எதை யும் நடத்தாமலிருப்பதாக இராணுவத் தர ப்புக் கூறுகின்றது.
புலிகள் தங்கள் பாதுகாப்புக்காகவே இம்மக்களை அங்கு தடுத்து வைத்திருக் கின்றார்கள். இவர்கள் தங்கள் சுயவிருப் பத்தின் பேரிலேயே அங்கு தங்கியிருப்ப தாகப் புலிகளும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் ஒருவேளை கூறலாம். முன்னரும் இப்படித்தான் கூறினார்கள். யுத்த சூன்யப் பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் சுயவிருப்பத்தின் பேரி லேயே அங்கே தங்கியிருப்பதாகச் சொன் னார்கள்.
ஆனால் அரச படையினர் மண் அணையை உடைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் சாரி சாரியாக மக்கள் வெளியேறியதிலிருந்து சுயவிருப்பக் கதை பொய்யானதென்பது முழு உலகுக்கும் நிரூபணமாகியது. இப்போது தங்கியிருப் பவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே இருக்கின்றார்கள் என்பதும் பழைய கதையைப் போன்றதாக இருக்கலாம்.
எவ்வாறாயினும், இப்போது யுத்த சூன் யப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் மக்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே இருக்கின் றார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத் துக் கொண்டாலும் கூட அம்மக்களை அங் கிருந்து வெளியேற்ற வேண்டிய தார்மீகக் கடப்பாடு புலிகளுக்கு உண்டு.
எக்காரணத்தைக் கொண்டும் அரசாங் கம் யுத்தநிறுத்தம் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. புலிகள் இய க்கத்தை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே இரா ணுவ நடவடிக்கையை அரசாங்கம் ஆரம் பித்தது.
அந்த இலக்கை அடையும் வரை நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என்பது இதுவரையில் புலிகளுக்கு நன்கு விளங்கியிருக்க வேண்டும். இந்த நிலை யில் இப்போது புலிகள் நடத்தும் யுத்தம் ‘மரணத்துக்கான போராட்டம்’ என்பதில் சந்தேகம் இல்லை.
சரணடைய வேண் டும் என்ற கோரிக்கையைப் புலிகள் நிரா கரித்து விட்டார்கள். படையினர் சுற்றி வளைத்திருப்பதால் தப்பிச் செல்வதற்கும் வழி இல்லை. எவ்வளவு தான் போரி ட்டாலும் இறுதியில் மரணம் என்பது புலிகளுக்கு விளங்காமலிருக்க முடியாது. தாங்கள் மரணத்தைத் தழுவுவதெனத் தீர் மானிக்கும் உரிமை புலிகளுக்கு உண்டு.
ஆனால் மக்களை மரணத்துக்குள் தள்ளி விடும் உரிமை இல்லை. மக்களுக்கா கவே ஆயுதம் தூக்கியதாகக் காலங்கால மாகக் கூறிவரும் புலிகள் மக்களை மர ணத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழிப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதால் யுத்த சூன்யப் பிரதேசத்திலிரு ந்து மக்கள் முழுமையாக வெளியேறு வதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலிகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தமிழ் மக் கள் மீது கரிசனை உள்ளவர்களாகவும் உரிமை கோருபவர்கள் புலிகளிடம் இக் கோரிக்கையை முன்வைப்பார்களென நம்புகின்றோம்.


0 commentaires :

Post a Comment