4/05/2009

கருணா அம்மானின் சி.சு.கட்சி அலுவலகத்துக்குள் வன்னிப் புலிகள் ஊடுருவல்.

மட்டக்களப்பு வடமுனையிலுள்ள அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்தில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்த குறிப்பிட்ட அலுவலகம் தற்போது அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் அலுவகமாக இயங்கி வருவதாகவும் கூறபப்டுகினறது.இவ் அலுவலகத்தில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் 17 வயதான ரேகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்து வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் அலுவலகப் பொறுப்பாளர் மொகிலன் எனவும் பொலிஸ் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது இந்த சம்பவத்தின் பின்பு அங்கு தங்கியிருந்த சந்திரசேககரன் மற்றும் குகன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


0 commentaires :

Post a Comment