4/21/2009

யாழ். முஸ்லிம்களின் வரலாற்று நூல் வெளியீடு


பிரபல தமிழ் மொழி மூல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான எஸ். எம். அப்துல் ரஹிமினால் எழுதப்பெற்ற “யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்” எனும் நூல் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.
யாழில் பிறந்துள்ள அப்துல் ரஹிம் 1960 முதல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும், 1985 வரை பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர் நீண்டகாலமாக தமிழ் பத்திரிகைகளுக்கு பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 commentaires :

Post a Comment