வவுனியா பொது வைத்தியசாலையின் பெண்ணியல் நோய் நிபுணர் டாக்டர் மீரா மொகிதீன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவர்களும் ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சுமார் ஒருமணி நேரம் கூடிய மருத்துவர்கள், தாதிகள், துணை மருத்துவ துறையினர் உட்பட பல்வேறு தர ஊழியர்கள் தமது கண்டனத்தையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.வைத்தியசாலையின் வழமை நிலை பாதிக்காத வகையில் இந்தப் போராட்டத்தில் மருத்துவர்களும் ஏனைய துறை சார்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment