4/01/2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி அச்சக நிறுவனம் அமைச்சர் முரளிதரன் ஆதரவாளர்களால் கொள்ளையிட முயற்சி.




தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சிக்குச் சொந்தமான அச்சக நிறுவனம் இன்று காலை அமைச்சர் முரளிதரனின் உத்தரவுக்கமைய அவரின் அடியாட்களான ரஞ்சன், இளங்கீரன் ஆகியோரின் தலமையிலான குண்டர் படையினால் ஆயுத முனையில் கொள்ளையிட முயற்சிக்கப்பட்டது. இதற்கு இக்குண்டர் படையினால் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது. இதனையடுத்து நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியினர் நீதிமன்றத்தை அணுகியதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைவாக இக்கொள்ளை தடுத்துநிறுத்தப்பட்டது.
தற்போது மட்டக்களப்பில் நிற்கின்ற அமைச்சர் முரளிதரன் அவர்கள் நேரடியாக வழங்கிய உத்தரவின் பெயரிலேயே இக்கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையான தமிழ் அலைக்குச் சொந்தமான இப்பதிப்பக நிறுவனம் 2005ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. மக்களின் உணர்வுப+ர்வமான கருத்துக்களுக்கும், கிழக்கு மாகாணம் தொடர்பான உண்மை நிலையினை வெளிக்கொணரும் இப்பத்திரிகை நிறுவனத்தின் வெளிப்பாட்டுத்தன்மை, உண்மைத்தன்மை என்பன தனது அரசியல் ஏமாற்று வித்தைக்கு பாரிய சவாலாக அமைகின்றது என்பதை உணர்ந்ததனாலேயே அமைச்சர் முரளிதரன் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
நிராயுத பாணிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியினர் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் ஆயுதக் குண்டர்களான முரளிதரன் குழுவினரின் இவ்வாறான நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பாரிய சவாலாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதையும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான வெளிச்செயல்களுக்கு பொலிஸார் துணை போனமை பலத்த கண்டனத்துக்குரியது.


0 commentaires :

Post a Comment