மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ள சிவிலியன்களை விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் நேற்று வெள்ளிகிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.வன்னியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் அங்கு உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும், விடுதலைப்புலிகள் சிறிய நிலப்பரப்பில் பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை அரசாங்கம் சிலியன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் உறுதி அளித்தது போன்று பாரிய ஆயுதங்களை சிவிலியன்கள் வாழும் பிரதேசத்தில் பிரயோகிப்பதைத் தவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான அத்தியாவசிய வசதிகளையும் ஐ நா. வழங்கும் மனிதாபிமான உதவிகளையும் ஒன்றிணத்துச் செயற்பட வேண்டும் என அவர் கூறியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment