4/30/2009

மட்டு/விளையாட்டு துறைக்குத் தடையாக அமையும் வெபர் மைதானம் மாற்றப்படுமா. பூ.பிரசாந்தன்


தூரநோக்கு சிந்தையும், நிலையான திட்டமிடலும் குறைகின்ற வேளையில் அபிவிருத்தி என்பது கனவாகச் சென்றுவிடும். விளையாட்டுத்துறை மனித வாழ்விலும் சமுதாய எழுச்சிக்கும் மிக முக்கியமானதாகும். ஆனால் இன்று வெறும் பொழுதுபோக்கிற்குக் கூட விளையாட்டினை பயன்படத்தாத நிலை மேலாங்கிவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முக்கிய விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானம் வீரர்களின் பாவனைக்காக பயன்படத்தப்பட்டு வருகின்றபோதும். ஆரகில் நீதிமன்றம் அமைத்துள்ளதினால் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு விளையாட்டு நிகள்வுகளின்போது ஒலிபெருக்கி இடைஞ்சலாக உள்ளது. ஒலிபெருக்கி பாவனை, பான்டுவாத்திய நிகழ்வு, இசை நிகழ்வுகள், ஆரவாரம் என எல்லாம் இணைந்துதான் விளையாட்டு நிகழ்வு. இவை இல்லாதவிடத்து வீரர்களுக்கான உந்துதல் குறைவடைகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வெபர் விளையாட்டு மைதானம் அல்லது நீதிமன்றம் இரண்டும் மிக மிக முக்கியமானவை. இவற்றில் ஒன்று நிச்சயமாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதன் மூலமே இரு துறையும் சிறப்பாகச் செயற்பட முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதுவருடத்தினை முன்னிட்டு மட்ஃபுதுக்குடியிருப்பு இளைஞர்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.அமலநாதன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.


0 commentaires :

Post a Comment