புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மனோ கணேசன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக தென் பகுதிகளில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களையும் அமைப்புக்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி அர்த்தம் இல்லாது போய்விடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக (ஐ.சி.ஆர்.சி.) புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும் அவரது சிரேஷ்ட உறுப்பினர்களையும் பாதுகாப்பாக நாடு கடத்த சர்வதேசத்தில் சதி இடம்பெற்று வருகின்றது. எனவே இது தொடர்பில் இராணுவ வீரர்களும் அரசாங்கமும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர்மாநாடு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment