4/09/2009

மட்டு. மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்


மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான 2009 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (09 ஆம் திகதி) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாக வுள்ளன.
கழகங்களுக்கிடையிலான குழு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவு களிலும் இருந்து பிரதேச செய லக மட்டத்திலான போட்டிகளில் வெற்றிபெற்ற விளையாட்டுக் கழகங்கள் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.
இன்று எல்லே போட்டி யும், நாளை கரப்பந்தாட்ட நிக ழ்ச்சியும், 11 ஆம் திகதி கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், 12 ஆம் திகதி கபடி ஆட்டமும் நடைபெறவுள்ளதாக மட்டக் களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு தெரி வித்துள்ளது.
ஆண் - பெண் இரு பாலாரும் போட்டிகளில் பங்குபற்றும் வகையில் இரு பிரிவுகளாக நிகழ்ச்சி கள் ஒழுங்கு செய்யப்பட்டு ள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.


0 commentaires :

Post a Comment