4/29/2009

ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைவதே பிரபாவுக்கு சிறந்தது





தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் பேட்டியில் தெரிவிப்பு


ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைய புலிகளின் தலைவர் தயாரில்லையென்றால் அவர் செய்யவேண்டிய ஒரே மாற்று வழி சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதேயா குமென்று இராணுவத்திடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் அவர்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,



இதற்கு முன்னர் புலிகளின் தலைவருக்கு மூன்று மாற்று வழிகள் இருந்தன. அதாவது ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு சரணடைதல், சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளல் அல்லது அப்பாவி தமிழ்மக்களை தொடர்ந்தும் துயரத்தில் ஆழ்த்தாது தப்பிச் செல்ல விடுதல் என்பனவாகும்.
எவ்வாறாயினும் புலிகளின் அமைப்பு பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். ஆதலால் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாடுகளின் அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கடைசி நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல புலிகளின் தலைவர் கருதினால் அது ஒரு போதும் சாத்தியப்படாது என புலிகளின் ஊடகப் பேச்சாள ராகவிருந்த தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் செய்ய வேண்டியது, தான் சிறைப்படு த்தியுள்ள அப்பாவி மக்கள் பற்றி பொறுப்புடன் சிந்தித்து அவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் துயரங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைவதே யாகுமென ஜோர்ஜ் மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.
மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற ஏனைய புலித் தலைமைகளும் உறுப்பினர்களும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு இராணுவ த்திடம் சரணடையுமாறு அவர்கள் கேட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களை சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் கிடைக்குமென ஜோர்ஜ் மாஸ்டர் கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வரும் பொதுமக்களை மாத்திரமன்றி சரணடையும் புலி உறுப்பினர்களையும் அரசாங்கம் நன்றாக கவனித்து வருவதனை தான் விளங்கிக் கொண்டதாக அவர் குறிப்பி ட்டார்.
இதேவேளை புலிகளின் தலைவர் ஒருபோதும் சமாதானத்துக்காக குரல் கொடுக்காத ஒரு தலைவரெனவும் ஜோர்ஜ் மாஸ்டர் கூறியுள்ளார்.



0 commentaires :

Post a Comment