4/23/2009

வாகரை பல நோக்குக் கூட்டுறவு சங்க காணிகளில் மரக்கறிவகைகள் உற்பத்தி


சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கோறளை வடக்கு (வாகரை) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அண்மைக்காலமாக வெகுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக 2 ஏக்கர் காணியில் மரக்கறிவகைகள் உற்பத்தியில் ஈடுபட்டு புத்தாண்டில் அறுவடையை ஆரம்பித்துள்ளது.
தற்போது புடோல், பீர்க்கு, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மற்றும் கறிமிளகாய், தக்காளி, மிளகாய், வாழை, பீற்றூட், கங்கூன் கீரை, பூசணி, முருங்கை என்பவற்றையும் விரைவில் அறுவடை செய்ய முடியுமென சங்கத்தின் பொதுமுகாமையாளர் கே. சில்வெஸ்டர் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment