4/05/2009
| 0 commentaires |
தமிழ் மக்களின் விமோசனத்துக்கு யுத்தநிறுத்தம் வழிவகுக்காது
தமிழ் மக்களின் விமோசனத்துக்கு யுத்தநிறுத்தம் வழிவகுக்காது
பல அமைப்புகளும் நிறுவன ங்களும் இலங்கைத் தமிழரின் விமோசனம் பற்றிப் பேசுகி ன்றன. இலங்கையில் மாத்திர மன்றித் தமிழகத்திலும் இக்குரல் ஒலிக்கி ன்றது. மனித உரிமைகளுக்கான கிறிஸ் தவ மதகுருமார் மன்றமும் இப்போது தமிழக அமைப்புகளின் பட்டியலில் சேர் ந்திருக்கின்றது.
இலங்கைத் தமிழரின் நலனில் தமிழகத் தமிழர்கள் அக்கறை செலுத்துவது மகிழ் ச்சிக்குரிய விடயமே. ஆனால் அவர்களின் முயற்சி தவறான தடத்தில் செல்வது கவ லையூட்டுகின்றது. இலங்கைத் தமிழரின் விமோசனம் பற்றிப் பேசுபவர்கள் யுத்த நிறுத்தம் பற்றியே பேசுகின்றார்கள்
யுத்த நிறுத்தத்தின் மூலம் மாத்திரமே இலங் கைத் தமிழருக்கு விமோசனம் உண்டு என்ற வகையில் இவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது, பிரச்சினையின் உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாமல் மேலெ ழுந்தவாரியான தகவல்களின் அடிப்படை யில் பேசுவது போல் தெரிகின்றது. யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்திய பின் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது பற்றி இவர்களிடம் தெளிவான சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.
வன்னியில் மோதல் பிரதேசத்தில் சிக்கி யுள்ள மக்கள் யுத்தநிறுத்தத்துக்குப் பின் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வார்களா? அல்லது யுத்தநிறுத்தத்துக்குப் பின் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை காண்ப தற்கான நிதானமான தேடலில் இலங்கை தமிழரின் விமோசனத்துக்கான சரியான நிலைப்பாடு பற்றிய தெளிவு பிறக்கும்.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்வதற்காக யுத்தநிறுத்தம் கேட்பதாக இருந்தால் யுத்தநிறுத்தம் இல் லாமலும் அது சாத்தியமாகும். மக்கள் வெளியேறிச் செல்லும் நேரங்களில் சண் டையை நிறுத்துவதாக அரசாங்கம் அறி வித்திருக்கின்றது. மக்கள் வெளியேறு வதற்குப் புலிகள் தடை விதிக்காமலிருந் தால் எவ்வித சிரமமும் இன்றி அவர்கள் வெளியேறலாம். புலிகள் தடுப்பதாலேயே மக்கள் வெளியேற முடியாமலிருக்கின்றா ர்கள். அவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகு வதற்கு இதுவே காரணம்.
யுத்தநிறுத்தத்துக்குப் பின் அரசியல் தீர் வுப் பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எத்த னையோ யுத்தநிறுத்தங்கள் இடம்பெற்று விட்டன. ஆனால் புலிகள் அரசியல் தீர் வுப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அர சியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கு இனி மேல் அவர்கள் வருவார்கள் என்று நம்பு வதற்கும் இடமில்லை.
தனிநாடு என்ற நிலைப்பாட்டை அவர்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. அரசியல் தீர் வுப் பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வரு வார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த கால ங்களில் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போன கசப்பான அனுபவத்துக்கூடா கவே இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும்.
இனப் பிரச்சினைக்கான அர சியல் தீர்வு முயற்சியை இதுவரை முன் னெடுக்க முடியாமல் போனதற்கான பிர தான காரணம் புலிகள் தனிநாட்டு நிலை ப்பாட்டைக் கைவிடத் தயாராக இல்லா ததே. எனவே, அரசியல் தீர்வு அரங்கிலி ருந்து புலிகள் அகலும் நிலையிலேயே அர சியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பது சாத்தியமாகும். யுத்தநிறுத்தம் புலிகள் தங்களை மீண்டும் பலப்படுத்துவதற்கே உதவுமென்பதால் அது மெய்நடப்பில் அரசியல் தீர்வை நிராகரிக்கும் கோரிக் கையாகின்றது.
மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக் கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டு மென்று புலிகளிடம் கோரிக்கை விடுப்ப துதான் அம்மக்களின் நலன் மீதுள்ள உண் மையான அக்கறையை வெளிப்படுத்தும்
thinakaran-edito
0 commentaires :
Post a Comment